Tamil book review --அபாய வனம்
✍️🌀"*முதல் தமிழ் நூல் விமர்சனம் | Book Review*" Writing my first book review 🌀✍️ தலைப்பு(Title) : அபாய வனம் | ஆசிரியர் (writer): இந்திரா சௌந்தர்ராஜன் (மர்மதேசம் புகழ்)✍️ அபாய வனம் புத்தகத்தை எடுத்தவுடனே அதன் அட்டைப்படமே நம்மை ஈர்த்துவிடுகிறது. அழகான ஒரு பெண் படமும் அருகாமையில் ஒரு நாகத்தினை வைத்தும் அமைக்கப்பட்டிருக்கிறது.✍️ புத்தகத்தை ஆவலாக பிரிபவருக்கு எவ்விதத்திலும் ஏமாற்றம் கொடுக்காத துவக்கம். மொத்தம் முப்பத்தி எட்டு அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயம் துவக்கத்திலும் வன வியாசம் எனும் பெயரில் வனங்களைப் பற்றியும் அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகளை பற்றியும் அனைத்து ராசி நட்சத்திரங்களுக்கு உறிய மரங்களையும் அது தரும் பலன்கள் பற்றியும் மிகவும் அருமையாக சொல்லப்பட்டுள்ளது. வன வியாசம் எனும் குறிப்புகளை தொடர்ந்து கதை தொடர்கிறது.✍️ மொட்டை மாடியில் கதை துவங்குகிறது. முதன்மை கதாபாத்திரமான குருவும் கதையின் நாயகன் பரணியும் வழக்கமான இளைஞர்கள் பேச்சை பேசிக்கொண்டிருக்க, மற்றொரு கதாபாத்திரமான சிவ பிரகாசத்தை கான நேர்கிறது.✍️ குடும்பம், வேலை, ஒருதலை காதல் என்று போய் கொண்டிருந...