Tamil book review --அபாய வனம்















புத்தகத்தை ஆவலாக பிரிபவருக்கு  எவ்விதத்திலும் ஏமாற்றம் கொடுக்காத துவக்கம். மொத்தம் முப்பத்தி எட்டு அத்தியாயங்கள். ஒவ்வொரு அத்தியாயம் துவக்கத்திலும் வன வியாசம் எனும் பெயரில் வனங்களைப் பற்றியும் அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகளை பற்றியும் அனைத்து ராசி நட்சத்திரங்களுக்கு உறிய மரங்களையும் அது தரும் பலன்கள் பற்றியும் மிகவும் அருமையாக சொல்லப்பட்டுள்ளது. வன வியாசம் எனும் குறிப்புகளை தொடர்ந்து கதை தொடர்கிறது.✍️






குடும்பம், வேலை, ஒருதலை காதல் என்று போய் கொண்டிருந்த பரணியின் வாழ்க்கை ஒரு கட்டத்தில் தலைகீழாக மாறுகிறது. வேலையை இழந்து தவிக்கும் நிலையில் ஒரு சம்பவம் அவன் வாழ்க்கை பயணத்தை  மாற்றுகிறது. ஜாதகம் ஜோதிடம் மீதெல்லாம் நம்பிக்கை இல்லாத்வனை அதன் பக்கமே அழைத்து செல்கிறது. இதில் குருவும் ஈடுபட, வரக்கூடிய அபாயங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள், குரு பரணி காதல் என்னவாகிறது. சிவப்பிரகாசம் என்னவானர் என்பதை படிக்க படிக்க சுவாரசியங்கள். படிபவரை இப்புத்தகம் கீழே வைக்க விடாமல் கவர்கிறது.✍️





https://www.instagram.com/saranyaraghav_readaholic_1001/?hl=en




Comments

  1. Yes good one... Different story... Carry on..Waiting for more review...வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Applying Darwin's theory ✨Book review ✨

Amara vazhuvu 📌Book Review📍

You belong with me 💫Book review 💫