Posts

Showing posts with the label Tamil Reviews

இரண்ய புராணம்📍நூல் விமர்சனம்🔖 |

Image
 தமிழ் நூல் விமர்சனம் |Book Review #165 📍 💫 தலைப்பு: இரண்ய புராணம் ஆசிரியர்: சி.வெ.ரா பக்கங்கள்: 260 பதிப்பகம்: The write order 💫 விமர்சனம்:📍 ✨ 🔹இரண்ய புராணம் என்னும் இந்நூல் முன்னொரு காலத்தில் நிகந்த புராண கதைகளை தழுவிய கற்பனை கலந்து புனையப்பட்டது.  ✨ 🔹காஹ்யபர் என்னும் முனிவருக்கு இரு மனைவிகள்  அதிதி, திதி என இருந்தனர். அதிதியின் பிள்ளைகள் இந்திரன், வருணன், முதலானோர் இந்திர லோகத்தையும், திதியின் பிள்ளைகளான இரட்டையர்கள் இரண்யகசிபு, இரண்யாடசன் அசுரலோகதை ஆண்டு வந்தனர். ✨ 🔸 திதியின் மகன் இரண்யாடசன் மாபெரும் வீரனும் பலசலியும் ஆவான். அப்பேர்பட்ட வீரன் ஒற்றை வராஹத்தால் கொள்ளப்பட்டு இறந்து விடுகிறான். ✨ 🔹அதன் பிறகு அவனுடைய இரட்டை சகோதரன் இரண்யகசிபு என செய்கிறான். திதியின் சகோதரி அதிதியின் மகன் இந்திரன் என்ன என்ன செய்கிறான். நாராயணன் என்னும் கடவுள் எப்படி உருவகிரார். நாரதர் கலகம் உண்மையில் நன்மையில் முடியுமா ? சுரர்கள் எப்படி தேவர்கர் ஆகிறார்கள்? இப்படி பல சுவரகியங்கள் கொண்டது இக்கதை. ✨ 🔹மிக அற்புதமான ஒரு படைப்பை கொடுத்திருக்கிறார் ஆசிரியர். நமக்கு தெரிந்த சிலவற்றை தெரிய...

துவாரகா 📍புத்தக விமர்சனம் 🔖

Image
 தமிழ் நூல் விமர்சனம் |Book Review #158 💫✨ 💫 தலைப்பு: துவாரகா ஆசிரியர்: ஜெகதீப் பக்கங்கள்: 195 பதிப்பகம்: ஏலே பதிப்பகம் 💫 விமர்சனம்:📍 ✨ 🔸துவாரகா என்னும் இந்நூல் தண்ணீரில் மூழ்கிய துவாரகா நகரைப் பற்றியும் அதை உருவாக்கிய வாசுதேவ கிருஷ்ணரை பற்றியும் ஆகும். ✨ 🔹கிருஷ்ணர் கம்சனை கொன்ற பிறகு வாசுதேவர், தேவகி, உக்ரசேனரையும் சேர்த்து சிறைவாசத்திலிருந்து விடுவிக்கப்பட்டு துவாரகையை உக்ரசேனர் ஆலதுவங்குகிறார். ✨ 🔸ஜராசந்தன் தன் மருமகன் கம்சனிற்காக கிருஷ்ணனை பழி வாங்க துடித்து பல முறை போர் தொடுத்து வருகிறான். அதிலிருந்து தன் நகர மக்களை காப்பதற்காக நன்கு புறமும் கடல் சூழ தேவர்களின் சிற்பியான விஷ்வகர்மாவை வைத்து கட்டப்பட்ட நகரே துவாரகா.  ✨ 🔹பிரஜைகளை துவாரகாவிற்குள் அழைத்து பிறகு கிருஷ்ணரும் பலராமரும் அவர்களின் பிரஜைகளும் படும் இன்னல்கள் தான் எத்தனை? ✨ 🔸பொதுவாக கிருஷ்ணர், மகாபாரதம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று , ஆகவே இப்புத்தகத்தின் அட்டை படமே என்னை கவர்ந்து இழுத்தது. முதல் அத்தியாயமே எண்ணில் ஈர்ப்பை ஏற்படுத்தியது. ✨ 🔹மந்தன், திரிமுகன், என்று சில கற்பனை கதாபாத்திரங்களின் அமைப்பு அர...

கடந்து போன பயணங்கள் 📍 புத்தக விமர்சனம் 🔖

Image
 தமிழ் நூல் விமர்சனம் |Book Review #155 💫 தலைப்பு: கடந்து போன பயணங்கள் ஆசிரியர்: சி. ரா. சங்கர் பக்கங்கள்: 49 பதிப்பகம்: ஏலே பதிப்பகம் 💫 விமர்சனம்:📍 💫 🔸கடந்து போன பயணங்கள் ஒரு அழகான பத்து தலைப்புகளில் அமைந்த ஒரு புத்தகம். ஆசிரியர் தன் பயண அனுபவங்களை கற்பனை நயங்கள் கொண்டு இப்புத்தகத்தை எழுதி உள்ளார்.  🔹நான் எலோருமே ஒரு முறையாவது பேருந்தில் பயணித்திருபோம் ஆனால் அதை ரசித்திருபோமா என்று கேட்டால் அது உறுதியாக சொல்ல முடியாது. அதுவே இந்த புத்தகத்தை படித்தல் ரசிக்க துவங்குவோம் அது உறுதி. 🔸ஆசிரியரின் வார்த்தை ஜாலங்கள், கற்பனை நயங்களை கண்டு நான் மிகவும் ரசித்தேன். பத்து தலைப்புகளும் பத்தே நாட்களில் பேருந்து பயணத்தில் அவர் எதிர்கொண்ட மனிதர்கள் அவர்களிடம் பெற்ற அனுபவங்களை பற்றியே இப்புத்தகம்.  🔹தேநீர் கடையின் அருமையுடன் துவங்குகிறது. திருநங்கைகளையும் சமமாக மதிக்க வேண்டிய அவசியத்தையும், அப்பா தனது பிள்ளையை தொலிலேயே பேருந்தில் தூங்க வைப்பது, பேருந்து நிற்குமிடத்தில் கட்ட படும் குருவி கூடு முதல், பிள்ளையின் ஒரே ஒரு தொலைபேசி அழைபிற்காக எங்கும் தந்தைக்காக, பிள்ளைக்கு பசியாற்ற முட...

அவளொரு பட்டாம்பூச்சி📍நூல் விமர்சனம்

Image
 தமிழ் நூல் விமர்சனம் |Book Review #153  💫 தலைப்பு: அவளொரு பட்டாம்பூச்சி  ஆசிரியர்: வெண்பா @venba_6 பக்கங்கள்: 43 பதிப்பகம்: ஏலே பதிப்பகம் @aelaypublish 💫 விமர்சனம்: 💫 🔸மொத்தம் 43 பக்கங்களை கொண்ட ஒரு அருமையான/அழகான குரு நாவலே இக்கதை. என் எழுத்துப் பயணம் என்னும் முன்னுரையில் தொடங்கியதுமே ஆசிரியர் வெண்பாவிற்கு புத்தகத்தின் மீது உள்ள அலவிலடங்கா ஆசையும் மரியாதையும் நமக்கு புலப்படுகிறது. 🔸 அவளொரு பட்டாம்பூச்சி என்னும் இந்நாவலில் ஒரு தந்தை தனக்கு பிறக்கும் பெண் (வெண்பா) குழந்தையை எப்படி தேவதை போல பார்த்து பார்த்து வளர்க்கிறார். தன் மொத்த வாழ்வையும் அவளுக்காகவே அற்பணிகிறார்.  அப்பா பெண்ணான வெண்பாவிற்கு மாறனின் நட்பு கிடைக்கிறது. அவர்களின் நட்பு புரிதல் பின்னாளில் எப்படி மாறுகிறது. தந்தை மகளின் பாசப்போராட்டம் என்னவானது என்பதே மொத்த கதை. 💫 🔸எளிமையான எழுத்து நடை கதை அம்சம் நல்ல உணர்வுவை நம்மில் உணர வைக்கிறது. மொத்தத்தில் இது ஒரு நல்ல காதல் கதையாக அமைந்திருக்கிறது. கதைக்கு ஏற்றார் போல அருமையாக புத்தகத்தின் தலைப்பை அமைத்துள்ளார் ஆசிரியர். வெற்றி பெற வாழ்த்துக்கள். கையெ...

ஒரு கையெழுத்து 📍தமிழ் நூல் விமர்சனம்🔖

Image
  📍தமிழ் நூல் விமர்சனம் |Book Review #144 💫 தலைப்பு: ஒரு கையெழுத்து ஆசிரியர்: செந்தமிழ் சுஷ்மிதா பக்கங்கள்: 87 பதிப்பகம்: ஏலே பதிப்பகம் @aelaypublish 💫 விமர்சனம்:📍 💫 🔸மொத்தம் 88 பக்கங்களை கொண்ட குரு நாவலே ஒரு கையெழுத்து. கதையின் நாயகன் தனசேகரன் நாயகி அல்லி. இவர்களின் காதல், போராட்டம் இவையே இக்கதை. தனசேகரன் சிறு வயதிலேயே தந்தையை இழந்து குடும்ப பாரத்தை சுமக்க துவங்கியவன். அல்லி சற்று வசதியான குடும்பத்தை சேர்ந்தவள்.  💫 🔸 அல்லியின் தோழி வானவில்லின் காதல் அவளது பெற்றோருக்கு தெரியவர, வானவில்லும் அவளது காதலன் பாலுவும் பெற்றோருக்கு தெரியாமல் ஓடிசென்று திருமணம் செய்ய இருந்து நிலையில் தனசேகரன் அவர்களுக்கு அறிவுரை கூற ஆதே சமயம் அல்லியும் வானவில்லின் தந்தையும் வந்து விட இறுதியாக மருது அவர்களின் காதலை சேர்த்து வைக்கிறார். 💫 🔹இதே போல தனது அப்பாவும் காதலை ஏற்பார் என்ற நம்பிக்கையில் அல்லி இருக்க ஒரு நாள் அவளின் அம்மா குந்தவை அதை கண்டுபிடிக்கிறார். அல்லி தனாவின் காதல் கைகூடுகிறதா இல்லையா என்பதே கதை. 💫 🔸எளிமையான எழுத்து நடை கதை அம்சம் நல்ல உணர்வுவை நம்மில் உணர வைக்கிறது. மொத்தத்தில்...

தீராத இரவு 📍Book Review 🔖

Image
📍தமிழ் நூல் விமர்சனம் |Book Review #139 💫 தலைப்பு: தீராத இரவு ஆசிரியர : கா. தீரன் @vanthiyathevan2 பக்கங்கள்: 86 பதிப்பகம்: @aelaypublish 💫 விமர்சனம் : ⏳ 💫 🔸தீராத இரவு ஒரு க்ரைம் த்ரில்லர் வகை குறுநாவல். ஒரு கட்டிட வேலை செய்யும் ஒரு தளத்தில் இளமாறன் மற்றும் சுப்பையா இருவருக்கும் நடக்கும்  கைகளப்பில் தொடங்குகிறது இக்கதை. 💫 🔹 ஒரு சில நேரத்திற்குள் நடக்கும் பத்திற்கும் மேற்பட்ட கொலைகளை கண்டு ஊரே அதிர்கிறது. அக்கொலைகளை யார் செய்தது, எதற்காக செய்தார்கள். 💫 🔸 அந்த கொலைகளை செய்தது யாரு என்பதை கண்டுபிடிக்க நரசிம்மன் என்னும் நேர்மையான DSP நியமிக்க படுகிறார். அவர் கொலைகாரனை கண்டுபிடித்தாரா என்பதே கதை. 💫 🔹நடுவில் நடக்கும் அண்ணன் தங்கை பாசம் நன்றாக அமைந்திருக்கிறது. புத்தகத்தில் ஓவியங்கள் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் அமைத்திருக்கிறார். எளிமையான எழுத்து நடை கதை அம்சம் நல்ல விறுவிறுப்பை நம்மில் ஏற்படுத்துகிறது. அடுத்த பாகதிற்காக காத்திருக்கிறோம். 💫 🔹மொத்தத்தில் இது ஒரு நல்ல க்ரைம் த்ரில்லராக அமைந்திருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள். கையெப்பம்மிட்ட புத்தகத்தை அனுபியதற்கு ஆசிரியருக...

வெண்மதி வெண்மதியே நில்லு 📍Book Review 🔖

Image
📍தமிழ் நூல் விமர்சனம் |Book Review #138 💫 தலைப்பு: வெண்மதி வெண்மதியே நில்லு ஆசிரியர : கா. தீரன் பக்கங்கள்: 177 பதிப்பகம்: ஏலே பதிப்பகம் 💫 விமர்சனம் :📍 💫 🔹கதையின் நாயகன் வல்லவன், வல்லவனின் வாழ்கை, காதல், பிறகு அதன் தோல்வி, அதிலிருந்து எப்படி மீல்கிரார் வாழ்கையை எப்படி கையாள்கிறார் என்பதே இக்கதை. 💫 🔸 முதலில் இன்ஸ்டாகிராம் என்னும் சமூக வலைதளத்தின் முளை வள்ளவனின் காதல் கதை துவங்குகிறது. அறிமுகமில்லாத பெண்ணை (வெண்மதி) நட்பாக்கி பின் இருவரும் காதலில் விழுகின்றனர். அந்த காதல் திருமணம் வரை செல்கிறது.  💫 🔹இவர்களது காதல் ஈடேருகிறதா இல்லையா என்பதே மீதிக்கதை. இதில் வள்ளவணின் அம்மா, அக்கா கதாபாத்திரங்கள் மிக நேர்த்தியாக, இயல்பாக அமைந்திருக்கிறது. 💫 🔸எளிமையான எழுத்து நடை கதை அம்சம் நல்ல உணர்வுவை நம்மில் உணர வைக்கிறது. அங்கங்கே சில எழுத்து பிழைகளை காண முடிகிறது.  💫 🔹மொத்தத்தில் இது ஒரு நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள். கையெப்பம்மிட்ட புத்தகத்தை அனுபியதற்கு ஆசிரியருக்கு மிக்க நன்றி. மேலும் அவரது படைப்புகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.  ⏳ 💫 🔸 thanks for sending me this ...

எ ஃபிலிம் பை கர்ணா 📍நூல் விமர்சனம்🔖

Image
 தமிழ் நூல் விமர்சனம் | Book Review #135 📽️ 🎬 தலைப்பு: எ ஃபிலிம் பை கர்ணா ஆசிரியர : சுவர் ராப்டர் @sujayraptor பக்கங்கள்: 135 பதிப்பகம்: எழிலினி பதிப்பகம்  🎬 📽️ விமர்சனம் :🎬 🔸 எ ஃபிலிம் பை கர்ணா - ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது இந்நூல்.  🔹வழக்கமான கதை போல இல்லாமல் திரைக்கதை போல வடிவமைத்துள்ளார் ஆசிரியர்.  🔸கர்ணனின் வாழ்க்கை மற்றும் திரைத்துறை அனுபவங்கள், காதல், கனவு, ஏமாற்றம், உழைப்பு, தோல்வி, துரோகம், நட்பு இவை அனைத்தும் கொண்டது இந்நூல்.  🔹கர்ணவின் இன்டர்வியூவை எடுக்க வரும் ஒரு குழுமம் இதில் தொடங்கி கர்ணாவின் பள்ளி பருவத்தில் அவனுக்கு சினிமா கனவு தொடங்குகிறது.  🔸 கல்லூரி படிப்பு முடிந்ததும் ஒரு கிளார்க் வேலை கிடைத்தது. சிறிது காலம் வேலை செய்த கர்ணா பின் அந்த வேலையை விட வேண்டிய நிலைக்கு தள்ள்படுகின்றார்.  🔹பின்பு கர்ணா படம் எடுத்தாரா, எத்தனை படம் எடுத்தார் அதில் வெற்றி பெற்றாரா ? கதையின் முடிவு இரு விதமாக ஒரு டிவிஸ்ட் போல அமைத்துள்ளார் ஆசிரியர். அதில் முதல் முடிவே என்னை கவர்ந்தது.  🔸புத்தகத்தை படிப்பதற்கு முன்னே அதன் அட்டைப் படம...

That second Street of babu ma'am 📍Book Review 🔖

Image
 Hey guys! I am back to review my first read of the year 2022 😍  ⬇️ #bookreview⏳#review #123 💫 Title: That second Street of babu ma'am ⏳ Review:🔖 ‌That second Street of babu ma'am House number 627 is a very good read that tells us about the blind trust that one has in a mendacious person.  ‌💫 ‌This is a memoir of a 45-year-old KanuPriya who works hard day and night with great dedication. But she did a mistake that turns her life upside down and take everything away from her. ‌💫 ‌That house number 627 (that changed her name as baby ma'am) made her life miserable and shattered every day of her life into bits and pieces. what mistake she had done? whom she trusted blindly? what happened in her life? Finally how she realises her fault at Ganga ghat. This is the remaining story for you to catch up.  ‌💫 ‌ The title and the cover page is so intriguing which grasp my attention to grab this read. The plot and narration are very good. It is based on a true incident that ...

நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து🔖Book Review📍

Image
  📍தமிழ் நூல் விமர்சனம் | Book Review #112 📍 💫 தலைப்பு: நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து 💫 ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் 💫 பக்கங்கள்: 72 💫 பதிப்பகம்: @desanthiripathippagam 💫 🔖 விமர்சனம் :📍 ✨நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து குழந்தைகளுக்கான ஒரு அருமையான புத்தகம்.  ✨அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பழனியப்பன் தன் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை எண்ணி கவலையில் இருக்கிறார். மாணவர் எண்ணிக்கை உயர என்ன செய்யலாம் என்று யோசிக்க துவங்குகிறார்.  ✨மாணவர்கள் சுற்றி உள்ள கிராமங்களில் வெகு தொலைவில் இருந்து வருவதற்கு பல சமயங்களில் இயலவில்லை. எனவே எப்படியாவது  பள்ளிக்கு ஒரு பேருந்து வாங்கி விடுவது என்று தலைமை ஆசிரியர் முடிவெடுக்கிறார்.  ✨பல போராட்டங்களுக்கு பின் மஞ்சள் நிறத்தில் ஒரு பேருந்து தணிகை பள்ளிக்கு வந்து சேருகிறது.  ✨பேருந்தின் வருகைக்கு பின் என்னவெல்லாம் நடக்கிறது. மாணவர்கள் பேருந்தின் மூலம் பயன் பெறுகிறார்களா? தணிகை அரசு பள்ளியில் சேர்க்கை அதிகரிக்கிறதா ? அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்பதே இக்கதை. 💫 @desanthiripathippagam #de...

Adventures of Mr Munchkins 📌Book Review📍

Image
#bookreview and blurb 💫Review #103 In association with 🔖 @kharidobechobooks  💫 📍 Title: Adventures of Mr Munchkins Author: Sahana Suman & Rakhi Kapoor pages: 80 Format: Paperback Rating: 🌠🌠🌠🌠4.5/5 📍 Check @kharidobechobooks for affordable book deals. The Crux: 🔖 Adventures of Mr Munchkins is an adorable story by Sahana Suman (a ten-year-old) and Rakhi Kapoor is written for children aged below 14. There are 11 stories in which each story is based on day to day life of Mr Munchkin from a different perspective. It revolves around a happy, fun-loving and child hearted man called Mr Munchkin. He owns an ice cream shop called Lick-a-way, which has various peculiar and unique qualities of ice creams. Mr Munchkin has several cute pets. He is a very kind-hearted person who adores everything but ends up being silly which provokes his wife's anger at times. It's a hilarious read every kid enjoys. Grab this beauty for your sweet little kid who loves stories. 💫 M...

In Loving Memory 🔖Book Review📍

Image
  #bookreview 💫 Review #102🔖 📍 Title: In Loving Memory Author: @danielpaulsingh_a pages: 258 Format: Paperback Rating: 🌠🌠🌠🌠4.8/5 📍 The Crux: 🔖 In loving memory by Daniel paul singh is a romantic thriller that consists of two parts. Part 1:  It revolves around Dhruv and Nisha on one side, Nivas and Rimi on the other. The story starts with Nisha falling for Dhruv a charming guy and her secret crush through Yammer an office social media site.  While at the same time a parallel story of, Nivas and Rimi kick starts as they started loving each other, who were in their school days.  By the time you complete part 1, you can guess somewhere both these love stories are interconnected. Part 2:  In the next part unlike part 1, it is full of murders, suspense, mystery and thrill.  The murder that happened towards the end of the story changes the plot and the reader's idea about finding a real murderer all together.  This unpredictable and unique case is ha...

Amara vazhuvu 📌Book Review📍

Image
  📍தமிழ் நூல் விமர்சனம் | Book Review #98 📌 🌀 தலைப்பு: அமர வாழ்வு 💫 ஆசிரியர்: கல்கி 💫 பக்கங்கள்: 32 💫 தரமீடு : 🌟🌟🌟🌟🌟4.5/5. 💫 🌀 விமர்சனம் : 📍 அமர வாழ்வு, அமரர் கல்கி எழுதிய புகழ் பெற்ற நாவல் வரிசைகளில் ஒன்று. இக்கதை இந்திய சுதந்திரத்திற்கு முன்பாக நடப்பது போல எழுத பட்ட கதை. கதையின் நாயகன் ராகவன், தன் தந்தையை போலவே ஒரு மருத்துவராக பணியை துவங்கியவர். அதே மருத்துவமனையில் ரேவதி என்னும் பெண் மருத்துவரை விரும்பி திருமணம் புரிந்து கொண்டு தலைமை மருத்துவரான குமரப்பவிடமிருந்தும் அவர் சூழ்ச்சியில் இருந்தும் தப்பித்து மலேஷியாவில் குடியெருகிறார்கள். அங்கு அவர்கள் பல போராட்டங்களை சந்திக்கிறார்கள், இறுதியாக நேதாஜி சுபாஷ் ச்ந்திரபோஸ் தலைமையிலான விடுதலை போராட்ட குழுவில் இணைகிறார்கள். அதன் பிறகு என நேர்கிறது என்பதே கதை. நான் படித்த கல்கி அவர்களின்  முதல் கதை என்னை ஈர்த்தது. இராகவன்,கர்னல் குமரப்பா, ரேவதியின் கதா பாத்திரங்கள் மிகவும் நேர்த்தியாக சொல்லப்பட்டிருந்தது. அனைவரும் படிக்க வேண்டிய ஒரு குறுங்கதை. 📌 @itsolianandh #tamilreadersbookclub #tamilbookstagram #tamilnovels #tamilnov...

பகைவனின் காதலி 📌 நூல் விமர்சனம்📍

Image
  📍தமிழ் நூல் விமர்சனம் | Book Review #93📌 💫 தலைப்பு: பகைவனின் காதலி 💫 ஆசிரியர்: விக்கிரமன் 💫 பக்கங்கள்: 88 💫 தரமீடு : ✨✨✨✨✨4.5/5. 💫 விமர்சனம் : 📍 பகைவனின் காதலி ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குரு நாவல். சிந்தாமணி சோழ நட்டு முன்னாள் தளபதியின் மகள். சோழ மன்னர் அவளை தன் சொந்த மகளை விட அதிகமாக பாசத்தையும் சுதந்திரத்தையும் கொடுத்து வளர்க்கிறார். பாண்டிய நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் எப்பொழுதும் விரோதம் குடிகொண்டுள்ளது. அவளுக்கு ஒரு நாள் காளி கோவில் வாயிலில் பாண்டிய நாட்டு இளவரசனுடன் சந்திப்பு ஏற்படுகிறது. ஒரு சில சந்திப்புகளில் இருவரும் காதல் வசப்படுகிறார்கள். இருவரின் காதல் இரு நாட்டு உறவை மேலும் விரோதத்தை உண்டாக்குகிறது அல்லது இருநாட்டு உறவை மெம்படுத்துகிறதா ? இதுவே மீதமுள்ள கதை. தமிழில் எனது முதல் சரித்திர நாவல் இதுவே. சோழர், பாண்டியர் காலத்தில் நடந்த சில நிகழ்வுகளுடன் ஒரு காவியக் காதல் கதையை பினைத்துள்ளார் ஆசிரியர். சிந்தாமணியின் பாச போராட்டம் நம்மை கவர்கிறது. மேலும் பல சரித்திர நாவல்களை படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.  📌 #pagaivaninkadhali #tami...

ஒரு மனிதன் ஒரு வீடியோ ஒரு உலகம்்📌Book Review📍

Image
 📍தமிழ் நூல் விமர்சனம் | Book Review #91📌 தலைப்பு: ஒரு மனிதன் ஒரு வீடியோ ஒரு உலகம் ஆசிரியர்:  ஜெயகாந்தன் பக்கங்கள்: 319 தரமீடு : ✨✨✨✨4.5/5 💫 கதை: 📍 சபாபதி பிள்ளை ஹென்றியின் வளர்ப்புத் தந்தை, இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். அவர் பணியில் இருந்த சமயத்தில் தான் நண்பன் மைக்கேல் உயிரை காப்பாற்ற போராடி தோர்கிறார். மரணித்த நண்பனின் மனைவி தன் தெரேசா. மூவரும் தப்பித்து பிழைத்து வருகையில் வழியில் ரயில் பெட்டியில் ஒரு குழந்தையை பார்க்கிறார்கள். மரணிக்கும் தருவாயில் மைக்கேல் தெரேஸாவையும் அந்த குழந்தையுடன் சபாபதியின் கையில் ஒப்படைக்கிறார். சபாபதி அக்குழந்தையை தோழன் போல வளர்க்கிறார். தன் கடந்த கால வாழ்க்கை சொந்த ஊர் என் எல்லா வற்றையும் பகிர்கிறார். ஹென்றி அங்கு சென்று பல அனுபவங்களை பெறுகிறான். 📌 கதையின் நாயகன் ஹென்றி, தான் யார் பூர்வீகம் என்ன பெற்ற தாய் தந்தை யார் என்ன என்பதே தெரியாமல் தான் வளர்ப்பு தந்தையின்(பப்பா) ஊரான கிருஷ்ணராஜபுரம் வந்து அடைகிறான். அவன் எதற்காக அங்கு வந்திருக்கிறான். அங்கு அவன் சந்திக்கும் மனிதர்கள், அனுபவங்கள் என்ன என்பதே இந்த கதை. ஹென்றி, இக்கதையில் செல்லும்...

அம்மா வந்தாள் 📌Book Review📍

Image
  தமிழ் நூல் விமர்சனம் | Book Review 90 📌 💫 தலைப்பு: அம்மா வந்தாள் 💫 ஆசிரியர்: தி. ஜானகி ராமன் 💫 💫 தரமீடு : 🌟🌟🌟3.8/5. 💫 கதை: 🔖 கதையின் நாயகன் அப்பு. காவேரிக் கரையில் அமர்ந்துகொண்டு தன் இருபது வருட வாழ்கையையும் வளர்ந்த படாசலையையும் விட்டுவிட்டு போகபொகிரோமே என்று நினைத்துக் கொண்டு இருட்டையும் பொருட்படுத்தாமல் இருக்கிறது. திடீரென பவனிஅம்மாள் இந்துவிற்கு தன்னை துணைக்கு வைத்துவிட்டு சென்றது நினைவிற்கு வந்தது. அவன் வாழ்க்கையை எப்படி வடிவமைத்துக் கொள்ளப் போகிறான் என்பதை எதிர்பார்க்கிறோம். ஆனால் நாம் எதிர்பாரா விதமாக நாவலின் நாடியே பின்னர் மாறிவிடுகிறது. இந்தக் கதையை எல்லோரும் அம்மாவின் பாத்திரத்திலிருந்து தான் எழுதியிருப்பார்கள், ஆனால் அப்புவை மையப்படுத்தி அம்மாவை அதில் ஒரு பாத்திரமாகப் படைத்திருக்கிறார். மொத்தத்தில் இக்கதை சற்று எனக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. அப்புவின் கதா பாத்திரம் மட்டுமே மனதில் நிலைத்து நிற்கிறது. 💫 #தி.ஜானகிராமன் #tamilbookstagram #tamilnovels #tamilnovel #tamilbookreview #tamilbookshelf #tamilreading #booklover #bookreview #tamilbookreview #bookstagram #t...

1882 vidadhu karuppu (1882 continuum)📌 Book Review📍

Image
  #bookreview 💫 Review #88📍 📌 Title: 1882 Vidadhu Karuppu (1882 continuum) Author: Marshall E Gass pages: 510 Format: paperback Rating: 🌠🌠🌠🌠4.3/5 🌀 The Crux:🔖 A Tamil translation of 1882 Continuum. This is a story about Reincarnation which takes place in New Zealand. The story is divided into two parts, which has 39 subdivisions. 📌 Part1:📍 The story starts in the year 1882 when Maoris and Britisher's fight are at war in regular skirmishes. In that particular year, passengers travelling through horse cart to Auckland, New Zealand acquaint with each other The horse driver Graham who was checking the list of passengers and befriends a few. The businessman Marshall Margam Gass was also travelling, where he meets Katerina who is sitting opposite him. She is genius in predicting the future to write every bit of it, waiting to get it published. She is aware of incidents that are going to happen between her and Marshall in future, so she starts reading few pages from...

ரகசியமாக ஒரு ரகசியம்🌀நூல் விமர்சனம்🔖

Image
🌀💫தமிழ் நூல் விமர்சனம் | 🔖Book Review #86🌀💫 💫 தலைப்பு: ரகசியமாக ஒரு ரகசியம் ஆசிரியர்: இந்திரா சௌந்த்ராஜன் வடிவம்: பேப்பர்பேக் பக்கங்கள்: 232 💫 தரமீடு : 🌟🌟🌟🌟🌟 4.8/5. 💫 கதை: 🔖 சித்தர்பட்டி என்னும் மலைக்கிராமத்தில் கதை தொடங்குகிறது. அங்கு சித்தேஸ்வரர் கோவிலில் நடக்கும் மர்ம முடிச்சிகளும் கொண்டவை இக்கதை. மாலை நேரங்களில் கோவிலுக்குள் நுழைந்தவர்கள் மரணத்தை தழுவுகின்றனர். அங்க அப்படி எல்லாம் நடக்க என காரணம். அதே கோவில் கிணற்றில் சுனைநீரால் தீராத நோய்களும் குணமாகி வந்தன. இதை கோவில் பட்டரின்  மகனான மணிசுந்தரம் துப்பு துலக்க விழைகிறான். அவனுக்கு உதவியாக பிரசாத் உள்ளிட்ட ஒரு சிலர் துணை நிற்க. கோவிலின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப் படுகிறதா ? மணிசுந்தரம் எண்ணவணன் யார் அந்த கொலைகளை செய்கிறார்கள் என்பது தான் கதை.  💫 💫 எனது கருத்து: 🌀 ஒரு அருமையான நல்ல படைப்பு என்றே கூறலாம். இந்திரா சௌந்த்ராஜனின் மற்றொரு மர்ம நாவல். பல திருப்பங்களும் மர்மங்களும் கொண்டவை. வழக்கம் போல நம்மை புத்தகத்தை முடிவைக்க விடாமல் ஈர்கிறது. இந்த நாவல் பல வருடங்கள் முன்பே தொலைக்காட்சி தொடரில் ரகசியம் என்ற பெ...

ஒரு உயிரின் குரல்💫நூல் விமர்சனம்🔖

Image
  💈⛲தமிழ் நூல் விமர்சனம் | Book Review #77 ⛲💈 💫 தலைப்பு: ஒரு உயிரின் குரல் 💫 ஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன் 💫 வடிவம்: paperback 💫 பக்கங்கள்: 216 💫 💫 தரமீடு : 🌟🌟🌟🌟🌟 4.8/5. 💫 கதை: 🔖 ஒரு உயிரின் குரல், கதையின் தொடக்கத்தில் பரமேஸ்வரனின் கடிதத்தை படித்தபடி அவரின் மகள் மாதங்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறாள். தன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது போல உணரும் பரமேஸ்வரான் அதை தன் மனைவியிடமும் மூத்த மகள்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம் இளைய மகள் மதங்கியிடம் கடிதம் மூலம் பகிர்கிறார். கடிதத்தை படித்து முடிக்கையில் அவளின் கண்ணீர் துளிகள் கடிதத்தை நினைக்க. சிறிது நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தால். எதிரே அவள் தந்தையின் படத்திற்கு மாலை இடப்படிருந்தது. அவரின் மரணத்தில் மாதங்கிக்கு சந்தேகம் ஏற்பட அதில் துப்பு துலக்க துவங்குகிறால். அவளின் தலைமை பத்திரிகை ஆசிரியரின் உதவியுடன் அவள் குடும்பத்திற்கு விரிக்கப்பட்ட சூழ்ச்சி வலையில் தன்னையும் தன் குடும்பத்தையும் மீட்டெடுக்கிறாளா என்பதே நீங்கள் படித்தறிந்து கெள்ள வேண்டிய கதை. 🎃 இதில் ஏவள், சூனியம் போன்றவை இடம் பெறுகின்றது குறிப்பிடத் தக்கது....

வித்தைக்காரக் சிறுமி💫நூல் விமர்சனம்🔖

Image
  💈⛲தமிழ் நூல் விமர்சனம் | Book Review #75⛲💈 தலைப்பு: வித்தைக்காரக் சிறுமி 💫 ஆசிரியர்: விஷ்ணுபுரம் சரவணன் 💫 வடிவம்: Paperback 💫 பக்கங்கள்: 60 💫 பதிப்பகம்: வானம் 💫 தரமீடு : 🌟🌟🌟🌟 4/5. எனது கருத்து: 🔖 வித்தைக்காரக் சிறுமி பத்து சிறுகதைகளைக் கொண்டது இப்புத்தகம். அனைத்துமே குழந்தைகளுக்காக எழுதப் பட்ட தொகுப்பு. ஆசிரியர் அனைத்து கதைகளையும் சுவாரசியமாக எழுதி உள்ளார். அவரின் கற்பனை மிக அருமை. எழுத்து நடை எளிய முறையில் எழுதியிருப்பது படிக்கும் சிறார்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.  💫 #tamilbookstagram #tamilnovels #tamilnovel #tamilbookreview #tamilbookshelf #tamilreading #booklover #bookreview #tamilbookreview #bookstagram #tamilauthor #tamilnovelreview #bookaholic #tamilbookcovers #tamil_book# tamilnovelreader #tamilnovelreader #bookroom.chennai #bookreviewersclub #book_reviewer_bookaddict