ஒரு மனிதன் ஒரு வீடியோ ஒரு உலகம்்📌Book Review📍
📍தமிழ் நூல் விமர்சனம் | Book Review #91📌
தலைப்பு: ஒரு மனிதன் ஒரு வீடியோ ஒரு உலகம்
ஆசிரியர்: ஜெயகாந்தன்
பக்கங்கள்: 319
தரமீடு : ✨✨✨✨4.5/5
💫
கதை: 📍
சபாபதி பிள்ளை ஹென்றியின் வளர்ப்புத் தந்தை, இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். அவர் பணியில் இருந்த சமயத்தில் தான் நண்பன் மைக்கேல் உயிரை காப்பாற்ற போராடி தோர்கிறார். மரணித்த நண்பனின் மனைவி தன் தெரேசா. மூவரும் தப்பித்து பிழைத்து வருகையில் வழியில் ரயில் பெட்டியில் ஒரு குழந்தையை பார்க்கிறார்கள். மரணிக்கும் தருவாயில் மைக்கேல் தெரேஸாவையும் அந்த குழந்தையுடன் சபாபதியின் கையில் ஒப்படைக்கிறார். சபாபதி அக்குழந்தையை தோழன் போல வளர்க்கிறார். தன் கடந்த கால வாழ்க்கை சொந்த ஊர் என் எல்லா வற்றையும் பகிர்கிறார். ஹென்றி அங்கு சென்று பல அனுபவங்களை பெறுகிறான்.
📌
கதையின் நாயகன் ஹென்றி, தான் யார் பூர்வீகம் என்ன பெற்ற தாய் தந்தை யார் என்ன என்பதே தெரியாமல் தான் வளர்ப்பு தந்தையின்(பப்பா) ஊரான கிருஷ்ணராஜபுரம் வந்து அடைகிறான். அவன் எதற்காக அங்கு வந்திருக்கிறான். அங்கு அவன் சந்திக்கும் மனிதர்கள், அனுபவங்கள் என்ன என்பதே இந்த கதை. ஹென்றி, இக்கதையில் செல்லும் கிராமத்தில் தேவராஜன், துறைக்கண்ணு, பாண்டு, மண்ணாங்கட்டி அக்கம்மால், மணியக்காரர் இப்படி பலதரப்பட்ட மனிதர்களையும் சந்திக்கிறான்.
📌
ஜெயகாந்தனின் மற்றொரு அருமையான படைப்பு இந்த ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் எனவே கூறலாம். ஹென்றி பப்பாவிடம் வைத்திருக்கும் மரியாதையும் பாசமும் நம்மை கவர்கிறது. ஹென்றி தேவராஜன் நட்பு இப்படி ஒரு நட்பு நமக்கும் கிடைக்காத என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. ஆசிரியரின் பல நூல்கள் இன்றும் காலம் கடந்து நிற்கின்றன என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு.
📌
#tamilbookstagram #tamilnovels #tamilnovel #tamilbookreview #tamilbookshelf #tamilreading #booklover #bookreview #tamilbookreview #bookstagram #tamilauthor #tamilnovelreview #bookaholic
#tamilbookcovers #tamil_book
#tamilnovelreader #tamilnovelreader
#bookroomchennai #bookreviewersclub #book_reviewer_bookaddict
Comments
Post a Comment