நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து🔖Book Review📍

📍தமிழ் நூல் விமர்சனம் | Book Review #112 📍 💫 தலைப்பு: நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து 💫 ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் 💫 பக்கங்கள்: 72 💫 பதிப்பகம்: @desanthiripathippagam 💫 🔖 விமர்சனம் :📍 ✨நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து குழந்தைகளுக்கான ஒரு அருமையான புத்தகம். ✨அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பழனியப்பன் தன் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை எண்ணி கவலையில் இருக்கிறார். மாணவர் எண்ணிக்கை உயர என்ன செய்யலாம் என்று யோசிக்க துவங்குகிறார். ✨மாணவர்கள் சுற்றி உள்ள கிராமங்களில் வெகு தொலைவில் இருந்து வருவதற்கு பல சமயங்களில் இயலவில்லை. எனவே எப்படியாவது பள்ளிக்கு ஒரு பேருந்து வாங்கி விடுவது என்று தலைமை ஆசிரியர் முடிவெடுக்கிறார். ✨பல போராட்டங்களுக்கு பின் மஞ்சள் நிறத்தில் ஒரு பேருந்து தணிகை பள்ளிக்கு வந்து சேருகிறது. ✨பேருந்தின் வருகைக்கு பின் என்னவெல்லாம் நடக்கிறது. மாணவர்கள் பேருந்தின் மூலம் பயன் பெறுகிறார்களா? தணிகை அரசு பள்ளியில் சேர்க்கை அதிகரிக்கிறதா ? அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்பதே இக்கதை. 💫 @desanthiripathippagam #de...