மாயப் புன்னகை--தமிழ் நூல் விமர்சனம்✍️
✍️தமிழ் நூல் விமர்சனம்✍️
தலைப்பு : மாயப் புன்னகை |
🔹
ஆசிரியர் : இந்திரா சௌந்தர்ராஜன்
🔸
வகை: மர்மம் / திகில்
🔹
பக்கங்கள்: 112
🔸
🔹
✍️புத்தகத்தின் அட்டை நம்மை சற்று மிரளவைகிறது.✍️
🔸
✍️நிரந்திர போட்டோகிராபர் வேலை தேடிக் கொண்டே ஒரு பத்திரிக்கையில் பிரீலேன்ஸ் வேலை பார்த்து வருபவன் நந்து. ஒரு நாள் வழக்கம் போல சாப்பிடும் மெஸ்ஸில் எதேச்சையாக அங்கு மாட்டப்பட்டிருந்த ஒரு யந்திரத்தை பற்றியும் அதன் மூலம் மர்மமான பஞ்சமூர்த்தி மலையையும் அதில் வாழ்ந்துவரும் பர்வதம்மமாவை பற்றியும் தெரிந்துகொள்ள, அதில் ஈர்க்கப்பட்டு ஆர்வத்தினால் தன் கேமராவை எடுத்துக் கொண்டு பஞ்சமுர்த்தி மலைக்கு புறப்பட, அங்கு நுழைந்தவுடன் காத்திருக்கிறது பல மர்மங்கள்.✍️ பஞ்சமூர்த்தி மலையில் ஒரு நாள் இரவு கயவர்கள் சிலர் மிருகவதை செய்து கொண்டிருக்க, அதே நேரம் நந்துவும் பர்வதம்மமாவை மலைமேல் ரகசியமாக காணச்சென்று புலியால் துரத்தப்பட்டு கால்கள் உடைந்து அடிபட்டு கிடக்க, அந்த ஊர் வைத்தியர் நந்துவை காப்பாற்றி திருப்பி அனுப்புகிறார். நந்து மறுபடியும் இரண்டாம் முறையாக மர்மத்தை உடைக்க வருகிறானா ? ✍️பர்வதம்மாவை கண்டவுடன் அவன் வாழ்க்கையில் என்னவாகிறது என பல மர்மமுடிச்சுகள் கொண்டவை இந்நூல். ஆசிரியர் வழக்கம் போல தனது விவரிப்பில் கவர்ந்துள்ளார்.
🔹
🔸
தரமீடு : ⭐⭐⭐⭐ 4/5.
Comments
Post a Comment