பகைவனின் காதலி 📌 நூல் விமர்சனம்📍


 

📍தமிழ் நூல் விமர்சனம் | Book Review #93📌

💫

தலைப்பு: பகைவனின் காதலி

💫

ஆசிரியர்: விக்கிரமன்

💫

பக்கங்கள்: 88

💫

தரமீடு : ✨✨✨✨✨4.5/5.

💫

விமர்சனம் : 📍

பகைவனின் காதலி ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குரு நாவல். சிந்தாமணி சோழ நட்டு முன்னாள் தளபதியின் மகள். சோழ மன்னர் அவளை தன் சொந்த மகளை விட அதிகமாக பாசத்தையும் சுதந்திரத்தையும் கொடுத்து வளர்க்கிறார். பாண்டிய நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் எப்பொழுதும் விரோதம் குடிகொண்டுள்ளது. அவளுக்கு ஒரு நாள் காளி கோவில் வாயிலில் பாண்டிய நாட்டு இளவரசனுடன் சந்திப்பு ஏற்படுகிறது. ஒரு சில சந்திப்புகளில் இருவரும் காதல் வசப்படுகிறார்கள். இருவரின் காதல் இரு நாட்டு உறவை மேலும் விரோதத்தை உண்டாக்குகிறது அல்லது இருநாட்டு உறவை மெம்படுத்துகிறதா ? இதுவே மீதமுள்ள கதை. தமிழில் எனது முதல் சரித்திர நாவல் இதுவே. சோழர், பாண்டியர் காலத்தில் நடந்த சில நிகழ்வுகளுடன் ஒரு காவியக் காதல் கதையை பினைத்துள்ளார் ஆசிரியர். சிந்தாமணியின் பாச போராட்டம் நம்மை கவர்கிறது. மேலும் பல சரித்திர நாவல்களை படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது. 

📌

#pagaivaninkadhali

#tamilbookstagram #tamilnovels #tamilnovel #tamilbookreview #tamilbookshelf #tamilreading #booklover #bookreview #tamilbookreview #bookstagram #tamilauthor #tamilnovelreview #bookaholic 

#tamilbookcovers #tamil_book

#tamilnovelreader #tamilnovelreader

#bookroomchennai #bookreviewersclub #book_reviewer_bookaddict

Comments

Popular posts from this blog

Applying Darwin's theory ✨Book review ✨

Amara vazhuvu 📌Book Review📍

You belong with me 💫Book review 💫